ஒரு வருடம் கூட இந்த ஆட்சி நிக்காது.. மார்ச் மாதத்திற்குள் கவிழும் : சுப்பிரமணிய சாமி கணிப்பு!

Author: Udayachandran RadhaKrishnan
10 June 2024, 8:21 pm

தனியார் ஊடகத்துக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி அளித்துள்ள பேட்டியில், பாஜக ஆட்சி அமைத்திருக்கவே கூடாது. எதிர்க்கட்சியாகக் கொஞ்சக் காலம் அமர்ந்திருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியை ஆட்சியமைக்க விட்டிருக்க வேண்டும்.

அந்த ஆட்சி கொஞ்ச நாளில் கவிழ்ந்து இருக்கும். அதன் பின்பாக மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரி இருக்கலாம். நான் இதை விமர்சிக்கிறேன்.

ஆகவேதான், அவரது அமைச்சரவையில் ஜால்ரா போடுகின்றவர்களை எல்லாம் சேர்த்துக் கொண்டுள்ளார். நான் மோடியின் தலைமையை ஏற்கவில்லை. அதற்கு சில காரணங்கள் உள்ளன. அதை இப்போது வெளிப்படையாகப் பேச முடியாது.

நான் தான் முதலிலிருந்தே பாஜகவுக்குப் பெரும்பான்மை கிடைக்காது என்று சொல்லி வந்தேன். அதைப்போல இப்போது 240தான் கிடைத்துள்ளது. எனது கணிப்புப் படி இந்த ஆட்சி அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கவிழ்ந்துவிடும். அதற்கு இந்த அரசு மேல் தாக்குப் பிடிக்காது.

பாஜகவை சில விசேச கொள்கைகளுக்காக உருவாக்கினோம். சந்திரபாபு நாயுடுவும் நிதிஷ்குமாரும் வந்த பிறகு எப்படி இந்தத்துவாவைப் பற்றிப் பேச முடியும்? அதைப் பேச இவர்களுக்கு இப்போது தைரியம் இருக்குமா? ஆகவே, பேச மாட்டார்கள். அப்படிப் பேசினால், இந்த இருவரும் கூட்டணியை விட்டுச் சென்றுவிடுவார்கள்.

காங்கிரஸ் அழைத்தால் நிதிஷும் நாயுடுவும் போய் விடுவார்கள். தேர்தலுக்கு முன்பாக நாயுடு காங்கிரஸ் கூட்டணியில்தானே இருந்தார்.

அப்புறம் பல்டி அடித்து பாஜகவுக்கு வந்துவிட்டார். இப்படி ஒரு கொள்கை இல்லாமல் அரசியல் செய்யக் கூடாது என்று கூறியுள்ளார்.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி