மோடி மோடி என கோஷமிடுபவர்களின் கன்னத்தில் பளார் கொடுக்க வேண்டும் : அமைச்சர் பேச்சால் சர்ச்சை!!

Author: Udayachandran RadhaKrishnan
26 March 2024, 2:03 pm

மோடி மோடி என கோஷமிடுபவர்களின் கன்னத்தில் பளார் கொடுக்க வேண்டும் : அமைச்சர் பேச்சால் சர்ச்சை!!

கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கர்நாடக காங்கிரஸ் அமைச்சர் சிவராஜ் தண்டகி கலந்து கொண்டார்.

அப்போது கூட்டத்தில் அவர் பேசியதாவது:-பிரதமர் மோடி ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை தருவதாக உறுதி அளித்தார். ஆனால் அவர் அதை கொடுக்கவில்லை. இதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும்.

10 ஆண்டுகளில் 20 கோடி வேலை வாய்ப்புகளை பா.ஜ.க. அரசு வழங்க தவறியதால் பிரதமரை புகழ்ந்து மோடி, மோடி என்று கோஷமிடும் அவரது இளம் ஆதரவாளர்களை கன்னத்தில் அறைய வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக அவர்கள் பொய்யின் அடிப்படையில் ஆட்சி நடத்துகிறார்கள். மேலும் அவர்கள் இன்னும் 5 ஆண்டுகளுக்கு முட்டாள் ஆக்கலாம் என்று நினைக்கிறார்கள். இந்தியாவில் 100 ஸ்மார்ட் சிட்டிகளை உருவாக்குவதாக பிரதமர் மோடி உறுதியளித்தார். அவை எங்கே உள்ளது? ஒரு பெயரை கூறுங்கள்.

பிரதமர் மோடி பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தார். அவர் ஒரு புத்திசாலி. நன்றாக உடை அணிகிறார். புத்திசாலித்தனமாக பேசுகிறார். மேலும் வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை மக்கள் புறக்கணித்து விடுவார்கள். தேர்தலில் ஓட்டு கேட்க அவர்கள் வெட்கப்பட வேண்டும். ஒரு வளர்ச்சி பணியை கூட செய்ய திறமையற்ற இவர்கள் பொய் சொல்லி ஆட்சிக்கு வந்தனர் என பேசினார்.

  • Bigg Boss Love Proposalபிக் பாஸ் வீட்டில் லவ் பிரபோஸ் செய்த சௌந்தர்யா.. வைரலாகும் ப்ரோமோ!
  • Views: - 317

    0

    0