டர்பண்ட் ஆயில் பேக்கிங் செய்யும் போது விபத்து : ஆயில் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயில் கருகி 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பலி!!

Author: Udayachandran RadhaKrishnan
30 January 2022, 6:40 pm

ஜெய்ப்பூர் : எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள டர்பெண்டைன் எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தொழிற்சாலை ஜெய்ப்பூரில் உள்ள ஜாம்வா ராம்கரில் அமைந்துள்ளது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அளித்த சிஓ சிவகுமார், தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பெயிண்ட் பொருட்கள் பேக்கிங் செய்யும் பிரிவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் முழுவதும் பரவியது.

பெயிண்ட் செய்ய பயன்படுத்தப்படும் டர்பெண்டைன் ஆயில் பேக்கிங் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ​​தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

  • Vikraman wife press meet அது ‘அதற்காக’ எடுக்கப்பட்ட வீடியோ.. விக்ரமன் மனைவி பரபரப்பு பேட்டி!