16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: அமைச்சரின் மகனுக்கு தொடர்பு..? பெண் உள்பட 3 பேர் கைது..!

Author: Vignesh
24 October 2022, 11:59 am

அகர்தலா: குமார்ஹட் பகுதியில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திரிபுரா மாநிலம் உனாகோட்டி மாவட்டம் குமார்ஹட் பகுதியில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் போலீசில் அளித்த புகாரில், கடந்த 19-ம் தேதி தனது வீட்டிற்கு அருகே வசித்து வரும் பெண் ஒருவர் தன் மகளை உனாகோட்டி பகுதியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்திற்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு தன் மகளை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார் என்று பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், பெண் உள்பட 3 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் மாநில பாஜக அமைச்சரின் மகனுக்கு தொடர்பு உள்ளதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
ஆனால், இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது.

திரிபுராவில் 16 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • DD Neelakandan viral video ஸ்காட்லாந்தில் ‘காதல்’ நாயகன்…டிடி வெளியிட்ட ரொமான்டிக் வீடியோ…குவியும் வாழ்த்து.!