ஓடும் ரயில் மீது கற்கள் வீச்சு : பயணிகளின் நகைகளை திருடும் கும்பல்.. அதிர்ச்சி சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2024, 7:34 pm

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் நள்ளிரவில் தொடர் ரயில் கொள்ளை சம்பவத்தால் பயணிகள் மத்தியில் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் இருந்து செகந்திராபாத் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில், பிடுகுரல்லா மண்டலம், தும்மல்செருவு ரயில் நிலையம் அருகே சென்றபோது ரயிலின் எஸ்6 மற்றும் எஸ்7 ஸ்லீப்பர் பெட்டிகளில் சங்கிலியை இழுத்து திருடர்கள் உள்ளே நுழைந்து தூங்கிக் கொண்டிருந்த மூன்று பெண் பயணிகளின் கழுத்தில் இருந்த தங்க செயினை திருடர்கள் பறித்துக்கொண்டு தப்பினர்.

ரயிலில் இருந்த பயணிகளை எச்சரிப்பதற்குள் கொள்ளையர்கள் தப்பியோடிவிட்டனர். இதுகுறித்து செகந்திரபாத் ரயில் நிலையத்தில் பயணிகள் புகார் அளித்தனர்.

இதேபோல் நடிக்குடி ரயில் நிலையத்தில் நரசாப்பூர் எக்ஸ்பிரஸ் மீதும் மர்மநபர்கள் கற்களை வீசி ரயிலை நிறுத்தி ஏற முயன்றனர். ஆனால் கதவுகள் மூடப்பட்டு இருந்ததால் அவர்களால் ஏற முடியவில்லை. தொடந்து ரயிலில் கொள்ளையர்கள் தாக்குதல் சம்பவத்தால் பயணிகள் அச்சத்தில் உள்ளனர்.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ