“17 வயது மாணவனுடன் 40 வயது டீச்சருக்கு காதல்!”-டீச்சர் மீது பாய்ந்த போக்சோ!

Author:
23 June 2024, 4:46 pm

விருதுநகர் மாவட்டம் ஆவியூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது மாணவன் மந்திர மேடையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி முதல் தனது மகனை காணவில்லை என மாணவனின் பெற்றோர் ஆவியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் விசாரிக்க தொடங்கினர் அப்போது தான் கல்லூரியில் சேர போவதாக கடிதம் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார் என்பது தெரியவந்தது.

இருப்பினும் காவல்துறையினர் அந்த மாணவர் படைத்த தனியார் பள்ளியில் விசாரணையை மேற்கொண்டனர் அப்போது அங்கு பணிபுரிந்த 40 வயதான பாத்திமா கனி என்பவருடன் தொடர்பில் இருந்ததாக தெரிவித்தனர். இது தெரிந்து அந்த ஆசிரியரை பள்ளி நிர்வாகம் வேறு பள்ளிக்கு மாற்றி விட்டது எனவும் தெரிவித்துள்ளது. பள்ளியில் கொடுத்த தகவலின் அடிப்படையில் அந்த ஆசிரியரையும் காவல்துறையினர் தேட தொடங்கினர்.அப்போது புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் விடுதியில் இருவரும் அரை எடுத்து தங்கியுள்ளது தெரியவந்தது. காவல்துறையினர் அங்கு சென்று இருவரையும் விசாரித்த போது மாணவருக்கு கல்லூரி சேர்ப்பதற்காக இங்கே தங்கி இருப்பதாக தெரிவித்தனர்.மாணவரின் பெற்றோருக்கு கொடுத்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் மீது காவல் துறையினர் போக்சோ வழக்கு பதிந்து கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த ஆசிரியருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!