மலைப்பாதையில் திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு எச்சரிக்கை.. டிராப் கேமராவில் பதிவான காட்சி… உடனே அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்..!!

Author: Babu Lakshmanan
28 October 2023, 1:11 pm

மலைப்பாதையில் திருமலை வரும் பக்தர்களுக்கு எச்சரிக்கை.. டிராப் கேமராவில் பதிவான காட்சிகள்… உடனே அறிவிப்பை வெளியிட்ட தேவஸ்தானம்..!!

ஆந்திரா – திருப்பதி மலைப்பகுதியில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். இதில், பெரும்பாலானோர், திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து மலைப் பாதை வழியாக நடந்து சென்று சன்னிதானத்திற்கு வருவார்கள். அப்படி செல்பவர்களை வனவிலங்குகள் தாக்குவது கடந்த சில மாதங்களாகவே அதிகரித்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு சிறுவனை சிறுத்தை இழுத்துச் சென்று, சற்று தொலைவில் விட்டுச் சென்ற சம்பவம் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து, சிறுமி ஒருவர் சிறுத்தை தாக்கிய உயிரிழந்தார். இதைடுத்து, பக்தர்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தையை, வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். அப்படி, 6 சிறுத்தைகள் பிடிக்கப்பட்டது. இதனால், பக்தர்கள் அச்சமின்றி மலைப் பாதை வழியாக பாதயாத்திரை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில், கடந்த 24 மற்றும் 27 ஆகிய தேதிகளில் மலைப் நடைபாதையில் உள்ள லட்சுமி நரசிம்ம சாமி கோயில் அருகே சிறுத்தை மற்றும் கரடியின் நடமாட்டம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ட்ராப் கேமராக்களில் பதிவாகியுள்ளது. எனவே, திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் தனியாக செல்ல வேண்டாம் என்று தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது பக்தர்களை பீதியில் ஆழ்த்தியுள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!