இனி திருப்பதி லட்டு சுலபமாக கிடைக்காது… பக்தர்களுக்கு ஷாக் கொடுத்த தேவஸ்தானம்..!!

Author: Udayachandran RadhaKrishnan
29 August 2024, 4:28 pm

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வரக்கூடிய பக்தர்களுக்கு இலவச தரிசனம் , ₹ 300 டிக்கெட், சர்வ தரிசனம் , விஐபி தரிசனம் என எந்த டிக்கெட்டுகளில் சுவாமி தரிசனம் செய்தாலும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது.

இது தவிர கூடுதலாக லட்டு தேவைப்படும் பக்தர்கள் கவுண்டர்களில் ₹ 50 கட்டணம் செலுத்தி இதற்கு முன்பு தேவைப்படும் லட்டுக்களை பெற்று வந்தனர்.

இருப்பினும் லட்டு விற்பனைக்கு ஏற்ப உற்பத்தி செய்ய முடியாத காரணத்தால் ஒரு பக்தருக்கு இரண்டு முதல் நான்கு லட்டுகள் வரை கூடுதலாக வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் லட்டு பிரசாதத்தை சில புரோக்கர்கள் மூலம் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.

இதனால் இனி ஆதார் கார்டு காண்பித்தால் மட்டுமே ஒரு பக்தருக்கு ஒரு லட்டு கூடுதலாக ₹ 50 விலைக்கு வழங்கப்படும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பதிக்கு வரக்கூடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்த பின்பு தங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நண்பர்களுக்கு லட்டு பிரசாதத்தை கொண்டு சென்று வழங்குவது வழக்கம்.

இதனால் தங்கள் தேவைக்கு காட்டிலும் நண்பர்கள் உறவினர்களுக்கு வழங்குவதற்காக கூடுதலாக லட்டு பிரசாதம் வாங்கி செல்வது வழக்கம்.

இந்நிலையில் திடீரென தேவஸ்தானம் ஒரு ஆதார் அட்டைக்கு ஒரு லட்டு மட்டுமே என கட்டுப்பாட்டு விதித்திருப்பது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 317

    0

    0