முக்கிய நிகழ்வான கருட சேவையை முன்னிட்டு திருப்பதி கோவில் 7 டன் மலர்களால் அலங்கரிப்பு : ஆச்சரியமுடன் பக்தர்கள் தரிசனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 October 2022, 2:20 pm

திருப்பதி மலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியான கருட வாகன சேவை இன்று இரவு 7 மணிக்கு துவங்கி நடைபெற உள்ளது.

கருட வாகன சேவையை கண்டு தரிசிப்பதற்காக பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் உள்நாட்டு மலர்கள் மட்டுமல்லாது இறக்குமதி செய்யப்பட்ட மலர்கள் உட்பட சுமார் ஏழு டன் மலர்களை பயன்படுத்தி ஏழுமலையான் கோவில், வாகன மண்டபம் ஆகியவற்றை தேவஸ்தான நிர்வாகம் அலங்கரித்துள்ளது.

இந்த பணிக்காக பல்வேறு பக்தர்கள் மலர்களை நன்கொடையாக தேவஸ்தானத்திற்கு வழங்கி உள்ளனர். கோவிலை அலங்கரிப்பதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள பல்வேறு வகையான மலர்கள் இறக்குமதி செய்யப்பட்டவை ஆகும். எனவே அவற்றை இதற்கு முன் பார்த்திராத பக்தர்கள் ஆச்சரியமுடன் பார்த்து செல்கின்றனர்.

  • Rafael Nadal retirement reaction by Dhanush ஓய்வு அறிவிப்பு.. நடிகர் தனுஷின் உருக்கமான பதிவு..
  • Views: - 528

    0

    0