ரூ.35 லட்சம் செலவு செய்தும் என்னை பதவியில் இருந்து தூக்கிட்டாங்க..நான் போற : செல்பி வீடியோ வெளியிட்டு ஆளுங்கட்சி பிரமுகர் தற்கொலை!!

Author: Udayachandran RadhaKrishnan
8 April 2022, 10:53 am

ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர் செல்பி வீடியோ வெளியீடு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

குப்பம் பகுதி கங்கமாம்பா கோவிலின் முன்னாள் கமிட்டி தலைவர் பார்த்தசாரதி. ஆளும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி பிரமுகரான இவர் செல்பி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கங்கமாம்பா கோவிலின் கமிட்டி தலைவர் பதவிக்காக ரூ.15 லட்சம் ஆளும் கட்சிப் பிரமுகர்களுக்கும், ஆலய கமிட்டி குழு அமைக்க 10 லட்சம் மற்றும் ஆலய சீரமைப்பு பணிகளுக்கு ரூ.10 லட்சம் என 35 லட்ச ரூபாய் செலவு செய்தும் பதவியிலிருந்து நீக்கியது வருத்தமளிப்பதாக அந்த வீடியோவில் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெரும் தொற்று காரணமாக நடத்தப்படாமல் இருந்த ஆலய திருவிழாவை இந்த ஆண்டு நடத்திக் கொடுத்து பதவியிலிருந்து விலகிக்கொள்வதாக கெஞ்சிய நிலையில் பதவியிலிருந்து நீக்கியது அவமானப்படுத்தும் வகையில் உள்ளது.

என்னுடைய இந்த தற்கொலைக்கு இரண்டு நிருபர்கள் (அந்திரஜோதி- சோமு ) (விஜயபாஸ்கர்) மற்றும் ஆளும் கட்சியைச் சேர்ந்த முக்கிய பிரமுகர் ( கிராமப்புற மின் கூட்டுறவு சங்கத் தலைவர் – செந்தில்) காரணமென செல்பி வீடியோ வெளியிட்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த செல்பி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. இதன் காரணமாக குப்பம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 1428

    0

    0