ஒப்பந்ததாரர் உயிரிழந்த விவகாரம்… கடும் நெருக்கடிக்கு மத்தியில் பதவியை ராஜினாமா செய்தார் அமைச்சர்… பரபரப்பில் அரசியல் களம்..!!

Author: Babu Lakshmanan
15 April 2022, 9:47 pm

ஒப்பந்ததாரர் உயிரிழந்த விவகாரத்தை தொடர்ந்து கர்நாடகா ஊரக வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

அரசு வளர்ச்சி பணிகளை செயல்படுத்துவதற்காக 40% கமிஷன் கேட்டதாக ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து துறை அமைச்சர் ஈஸ்வரப்பா மீது அரசு சிவில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் குற்றம்சாட்டியிருந்தார்.

இதைத் தொடர்ந்து, அவர் தங்கியிருந்த விடுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இறப்பதற்கு முன்பாக, தனது நண்பர்களுக்கு, தனது இறப்பிற்கு அமைச்சர் ஈஸ்வரப்பாதான் காரணம் என்று வாட்ஸ்அப்பில் அனுப்பியிருந்தார்.

இது தொடர்பாக அமைச்சர் ஈஸ்வரப்பா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த நிலையில், அவரை பதவி நீக்கம் செய்யுமாறு முதலமைச்சர் பசவராஜ் பொம்மையின் இல்லத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கேஎஸ் ஈஸ்வரப்பா, தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக அறிவித்தார். இந்த நிலையில், அவர் இன்று அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முதலமைச்சர் பசவராஜ் பொம்மையிடம் ராஜினாமா கடிதத்தை அவர் கொடுத்தார்.

  • good bad ugly movie special screening for ladies பெண்களுக்கு மட்டுமே திரையிடப்படும் குட் பேட் அக்லி திரைப்படம்! அதிரடி காட்டிய பிரபல திரையரங்கம்…