மத்திய அரசுக்கு எதிராக இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் : மக்களைவயில் தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் முடிவு!

Author: Udayachandran RadhaKrishnan
26 July 2023, 8:17 am

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கடந்த 4 நாட்களாக இரு அவைகளிலும் மணிப்பூர் சம்பவம் எதிரொலித்தது. இதுபற்றி விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டன. இதனால், இரு அவைகளின் நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டன.

இரு அவைகளிலும் தொடர்ந்து அமளி ஏற்பட முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ள மணிப்பூர் விவகாரம் பற்றி விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பலர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கூட்டத்தொடரில் பங்கேற்க காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி தலைவர் மற்றும் எம்.பி.யான சோனியா காந்தி நேற்று வருகை தந்தார். இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்தில், மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது என கட்சியினர் ஆலோசனை மேற்கொண்டனர் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்நிலையில் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இன்று மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர உள்ளதாக மேற்கு வங்காள காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பான நோட்டீஸ் கட்சி அலுவலகத்தில் தயாராக இருப்பதாகவும், காலை 10 மணிக்கு முன்னதாக மக்களவைச் செயலர் அலுவலகத்துக்கு வந்து சேரும் என்றும் அவர் கூறினார்.

இதன்படி 26 கட்சிகள் அடங்கிய மெகா எதிர்க்கட்சி கூட்டணி (I.N.D.I.A.) மத்திய அரசுக்கு எதிராக இன்று நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரவுள்ளது. மணிப்பூர் நிலவரம் குறித்து மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேச வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 357

    0

    0