ஜேபி நட்டா படத்துடன் கல்லறை : இடைத்தேர்தல் நெருங்கும் நிலையில் ஆளுங்கட்சி செய்த செயல்.. வெடித்த சர்ச்சை!!
Author: Udayachandran RadhaKrishnan20 October 2022, 5:42 pm
தெலுங்கானாவில் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது.
தெலுங்கானாவில் ஆளும் டி.ஆர்.எஸ் கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்த நிலையில், அங்குள்ள முனுகோட் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்த ராஜ்கோபால் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு பாஜகவில் இணைந்து கொண்டார்.
இதனால், வரும் நவம்பர் 3 ஆம் தேதி முன்கோட் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதியில் பாஜக வேட்பாளராக ராஜ்கோபால் போட்டியிடுகிறார்.
இந்த இடைத்தேர்தலால் அங்கு அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், முனுகோட் தொகுதிக்குட்பட்ட மல்காபுரம் என்ற இடத்தில் சுடுகாட்டில் ஒருவரை புதைத்தது போல் மண்மேட்டை உருவாக்கி அதில் மாலைகள் வைக்கப்பட்டுள்ளது.
அதன் அருகில் பாஜக தேசிய ஜேபி நட்டாவின் படம் இடம்பெற்றுள்ள பேனர் வைக்கப்பட்டுள்ளது. இது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு ஜேபி நட்டா முன்கோட் சட்டசபையில் புளோரைடு தொடர்பான ஆராய்ச்சி மையம் அமைக்கப்படும் என்ற வாக்குறுதி அளித்து இருந்தார்.
இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஜேபி நட்டா படத்துடன் கல்லறை அமைக்கப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தரம் தாழ்ந்த செயல் என்று பாஜக விமர்சித்துள்ளது.