டிக்கெட், டிக்கெட் : தனியார் பேருந்தில் அளவுக்கதிகமான பயணிகள்… இனிதே பணியை செய்த நடத்துநர்.. வீடியோவால் சிக்கிய ஓட்டுநர்!!
Author: Udayachandran RadhaKrishnan7 April 2022, 6:18 pm
கேரளா : பாலக்காட்டில் தனியார் பேருந்தில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி பேருந்தின் மேற்பகுதியில் ஏறிய பயணிகளுக்கு பேருந்து நடத்துநர் டிக்கெட் எடுக்கும் வீடியோ வைரலாகி சர்ச்சையாகியுள்ளது.
கேரளா மாநிலம் பாலக்காடு நென்மாறா – கோழிக்கோடு வழியாக இயங்கும் தனியார் பேருந்து ஒன்றில் அந்த பகுதியில் நடைபெறும் கம்ப வெடிக்கட்டு நிகழ்ச்சியை பார்க்க சென்றவர்கள் , இந்த தனியார் பேருந்தின் உட்புறம் உட்பட பஸ்சின் மேல் பகுதியிலும் அமர்ந்து பயணம் செய்துள்ளனர்.
இவர்களுக்கு நடத்துனர் பஸ்ஸின் மேல் பகுதியில் சென்று டிக்கெட்டும் கொடுத்துள்ளார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாகி பரவியுள்ளன. தனியார் பஸ்ஸின் ஓட்டுனர் மற்றும் நடத்துனரும் அளவுக்கு மீறி ஏறிய பயணிகளை பஸ்சை விட்டு வெளியேற கேட்டுள்ளனர்.
இருந்தும் பயணிகள் இறங்காததால் ஓட்டுனர் பஸ்ஸின் மேல் புறத்தில் இருந்த பயணிகளுக்கும் மேலே ஏறி டிக்கெட் கொடுத்துள்ளார். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலாமனதை தொடர்ந்து பல்வேறு எதிர்ப்பு குரல்களும் எழுந்துள்ளன. இதைத் தொடர்ந்து நடத்துனர் உட்பட ஒட்டுனரின் மேல் கேரளா போக்குவரத்து துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.