ஆயிரம் அடி பள்ளத்தில் கவிழ்ந்த கார்…சுற்றுலா பயணிகள் 4 பேர் பரிதாப பலி: மீட்பு பணிகள் தீவிரம்..!!

Author: Rajesh
16 May 2022, 5:43 pm

சிம்லா: இமாச்சலப்பிரதேசத்தில் கார் ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 4 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இமாச்சலப்பிரதேசத்தில் குளு மாவட்டத்தில் மலைப்பகுதி சாலையில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.

கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் சுற்றுலாப்பயணிகள் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். பஞ்சார்-ஜலோரி-ஜோட் சாலையில் கியாகி பகுதிக்கு அருகில் இந்த விபத்து நடந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான கார் டெல்லி பதிவு எண்ணை கொண்டுள்ளது என்று கூறிய போலீசார், விபத்தில் உயிரிழந்தவர்களின் விபரங்கள் இன்னும் தெரியவில்லை என்றும், தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

  • goundamani shout actors in shooting spot ஒரே ஒரு டயலாக் பேசுனது குத்தமா? ஷூட்டிங் ஸ்பாட்டில் லெஃப்ட் ரைட் வாங்கிய கவுண்டமணி…
  • Close menu