நாய்கள் துரத்தியதால் விபரீதம்.. ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் 9 நேர போராட்டத்திற்கு பிறகு மீட்பு : பஞ்சாப் அருகே நடந்த சோக சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
22 May 2022, 10:39 pm

பஞ்சாப் மாநிலம் கர்திவாலா பகுதி அருகே ரித்திக் என்கிற 6 வயது சிறுவன் வயல் வெளியில் விளைாயடிக் கொண்டிருந்தான். அப்போது சிறுவனை வெறிப்பிடித்த நாய்கள் சில துரத்தியுள்ளது.

இதனால் பயந்துப்போன சிறுவன் அங்கிருந்த ஓடியுள்ளான். அங்கு ஆழ்துளைக் கிணறி ஒன்று சாணல் பையால் மூடியிருப்பதை கவனிக்காமல் அதில் கால் வைத்து உள்ளே விழுந்தான்.

சுமார் 300 அடி ஆழமுள்ள ஆழ்துளைக் கிணற்றில் 100 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியுள்ளான். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த மீட்பு படையினர் சிறுவனனை மீட்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முதற்கட்டமாக சிறுவனுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், ” ஹோஷியார்பூரில், 6 வயது சிறுவன் ரித்திக் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துவிட்டான். சிறுவனை மீட்டுகும் பணி குறித்து நிர்வாகத்துடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனை 9 மணி நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கபட்டான்.

இந்த துயரச் செய்தியை அறிந்த பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ட்விட்டரில் பகிர்ந்துள்ளதோடு, சிறுவனின் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
ஹோஷியார்பூரைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ஹிருத்திக் ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்தான். சிறுவனின் குடும்பத்திற்கு கடவுள் வலிமையை தர வேண்டும். குடும்பத்தின் இழப்பை ஈடு செய்ய முடியாது. இந்த துயர நேரத்தில் அவர்களுடன் நாங்கள் இருக்கிறோம். சிறுவனின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

  • Ajith exits Neeruku Ner விஜய் படத்திற்கு NO சொன்ன அஜித்..அடுத்தடுத்து விலகிய பிரபலங்கள்..!
  • Views: - 646

    0

    0