அமெரிக்காவில் மீண்டும் சோகம்.. அதிகரிக்கும் இந்திய மாணவர்களின் உயிரிழப்பு..!!

Author: Udayachandran RadhaKrishnan
6 April 2024, 5:55 pm

அமெரிக்காவில் மீண்டும் சோகம்.. அதிகரிக்கும் இந்திய மாணவர்களின் உயிரிழப்பு..!!

2024ம் ஆண்டு துவக்கத்தில் இருந்து, அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் உயிரிழந்து வரும் சம்பவம் அடிக்கடி அரங்கேறி வருகிறது. அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் இந்திய மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள ஒகையோ மாநிலத்தில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.

இது குறித்து இந்திய தூதரகம் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒகையோ மாநிலத்தில் கல்வி பயின்று வந்த உமா சத்ய சாய் என்ற இந்திய மாணவர் உயிரிழந்துள்ளார்.

இறப்புக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடைபெற்று வருகிறது.
உமா சத்ய சாயை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம்.

இந்த துயரமான நேரத்தில் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வர, அனைத்து உதவிகளும் குடும்பத்திற்கு செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இது 2024ம் ஆண்டு துவக்கத்தில் இருந்து, அமெரிக்காவில் இந்திய மாணவர்கள் உயிரிழக்கும் 10வது சம்பவம்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…