குழப்பிய Google Map.. இந்திய இளைஞர் உள்ளிட்ட இருவர் ஆபத்தான இடத்தில் சிக்கி உயிரிழந்த சோகம்..!
Author: Vignesh26 August 2024, 1:32 pm
மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் உள்ள தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தில் தெலுங்கானாவின் கரீம் நகரை சேர்ந்த முகமது சேஷாத் கான் பணியாற்றி வந்தார். இவர் தன்னுடன் பணிபுரியும் சூடான் நாட்டை சேர்ந்த நண்பருடன் உலகின் மிகவும் ஆபத்தான பாலைவனங்களில் ஒன்றான ரப் அலி காலி பாலைவனத்திற்கு சமீபத்தில் ஜீப்பில் சென்றிருந்தார்.
அப்போது, மொத்தம் 650 கிலோமீட்டர் பரப்பளவு உடைய இந்த பாலைவனம் நஜ்ரான் மாகாணங்கள் உள்ளிட்ட ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஓமன் மற்றும் ஏமன் வரை நீண்டுள்ளது. இங்குள்ள சூழல்கள் மிகவும் ஆபத்தானது என்பதால், அங்கு பொதுவாக யாரும் செல்வதில்லை.
மொபைல் போனில் உள்ள கூகுள் மேப்பை நம்பி சென்ற அவர்கள் ஆபத்தான இடத்தில் சிக்கி வழி தெரியாமல் தவித்தனர். மேலும், சோதனையாக பேட்டரியும் தீர்ந்ததால் மொபைல் ஃபோனும் வேலை செய்யவில்லை. உதவிக்கு யாரையும் அழைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட எதிர்பாராத விதமாக ஜிப்பிலிருந்து எரிபொருளும் தீர்ந்தது.

இதனால், வழி தெரியாமல் எங்கும் செல்ல முடியாமல் சேஷாத் கான் மற்றும் அவரது நண்பர் இருவரும் நான்கு நாட்கள் பாலைவனத்தில் சுற்றித் திரிந்தனர். ஒரு கட்டத்தில் உணவும், தண்ணீரும் இல்லாமல் இருவரும் சோர்வடைந்தனர்.
வெப்பம் உச்சத்தில் இருந்தது மற்றும் கடுமையான சோர்வு காரணமாக இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இருவரும் பணிக்கு வராததை அடுத்து, அலுவலகத்தில் இருப்பவர்கள் அளித்த புகாரைத் தொடர்ந்து நடத்திய தேடுதல் வேட்டையில், அவர்கள் இருவரின் உடல்களும் பாலைவனத்தில் இருந்து மீட்கப்பட்டது. இது தொடர்பாக அந்நாட்டு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.