கார் விபத்தில் இளம் நடிகை பரிதாப பலி : பார்ட்டிக்கு சென்று திரும்பிய போது சோகம்.. அதிவேகமாக கார் ஓட்டியதே விபத்துக்கு காரணம்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 March 2022, 4:38 pm

ஓட்டலில் பப்புக்கு சென்று காரில் திரும்பிய இளம் நடிகை விபத்தில் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

யூடியூப் மூலம் பிரபலமான காய்த்தி, தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமாகி வருகிறார். இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று ஐதராபாத்தில் நடந்த ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

Tollywood Actress Gayathri died in road accident

அங்கு நண்பர்களுடன் ஆடிப்பாடி விளையாடி மகிழ்ந்த காயத்ரி, இரவில் பப்புக்கு சென்று பார்ட்டி கொண்டாடி உள்ளார்.இதையடுத்து நள்ளிர நண்பர்களுடன் காரில் வீட்டுக்கு கிளம்பி உள்ளார் காயத்ரி. கட்சிபவுலி என்கிற இடத்தின் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார் விபத்தில் சிக்கி கவிழ்ந்தது.

இதில் 26 வயதான இளம் நடிகை காயத்ரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதிவேகமாக கார் ஓட்டியதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.

Dolly D Cruze Gayathri Death Reason, Car Accident News, Age, Biography,  Family, Parents, Video, Short Film Actress Photos, Instagram - The  SportsGrail

காரில் பயணித்தவர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நடிகை உயிரிழந்த செய்தி அறிந்த ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த விபத்தில் நடிகையுடன் பயணித்த ஓட்டல் தோட்ட வேலை செய்து வந்த 38 வயதுடைய பெண்ணும் உயிரிழந்தார்.

  • அஜித் ரசிகர்களுக்கு கிறிஸ்துமஸ் சர்ப்ரைஸ்..விடாமுயற்சி பாடல் லிரிக் எப்போ ரிலீஸ்-னு தெரியுமா..!
  • Views: - 1655

    0

    0