தொழிலதிபர் வீட்டில் பட்டாசு தயாரிக்கும் போது விபரீதம் : எதிர்பாராத விதமாக பட்டாசுகள் வெடித்து 6 பேர் பலி…8 பேர் படுகாயம்!!
Author: Udayachandran RadhaKrishnan24 July 2022, 6:44 pm
பீகாரின் சரண் மாவட்டத்தில் குடாய் பாக் கிராமத்தில் உள்ள தொழிலதிபரின் வீடு ஒன்றில் இன்று திடீரென பட்டாசுகள் வெடித்து உள்ளன.
இதில், வீட்டின் ஒரு பகுதி வெடித்து விழுந்துள்ளது. வீட்டின் மற்ற பகுதியில், பட்டாசு வெடித்ததில் தீப்பற்றி கொண்டது. இதனால், வீட்டின் பெரும்பகுதி இடிந்து விழுந்துள்ளது.
இந்த சம்பவத்தில், சிக்கி 6 பேர் உயிரிழந்து உள்ளனர். 8 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கி கொண்டனர். அவர்கள் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். மாவட்டத்தின் தலைமையகம் அமைந்த சாப்ரா நகரில் இருந்து 30 கி.மீ. தொலைவில் கிராமம் உள்ளது.
இதுபற்றி விசாரணை மேற்கொள்ள தடயவியல் குழு மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழு வரவழைக்கப்பட்டு உள்ளது. முதல் கட்ட விசாரணையில் வீடு, தொழிலதிபர் சபீர் உசைன் என்பவருடையது என தெரிய வந்துள்ளது.
வீட்டில் பட்டாசு வெடித்தபோது, வீட்டின் உள்ளே பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்துள்ளன. வெடிசத்தம் தொடர்ந்து ஒரு மணிநேரம் கேட்டுள்ளது என போலீசார் தெரிவித்து உள்ளனர். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.