குடும்பத்துடன் பாலத்தில் செல்ஃபி எடுக்கும் போது விபரீதம்.. அணையில் தவறி விழுந்த பெண்..!!

Author: Udayachandran RadhaKrishnan
31 August 2024, 11:05 am

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து நல்கொண்டா மாவட்டம் மிரியாலகுடாவுக்கு ஒரு குடும்பம் காரில் சென்று கொண்டுருந்தனர்.

அப்போது செல்லும் வழியில் நல்கொண்டா மாவட்டம் வெமுலபள்ளியில் நாகார்ஜுனா சாகர் இடது கரை கால்வாயில் காரை நிறுத்தினர்.

நாகார்ஜுனா சாகாரில் நீர்வரத்து அதிக அளவில் உள்ளதால் அணையின் மதகுகள் திறக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த கால்வாயில் கடந்த சில வாரங்களாக தண்ணீர் சீற்றத்துடன் செல்கிறது.

இந்நிலையில் வெமுலப்பள்ளி பாலத்தில் உள்ள இடது கால்வாய் அருகே குடும்பத்தினருடன் செல்ஃபி எடுக்கும்போது அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் கால் தவறி கால்வாயில் விழுந்தார்.

உடனடியாக இதை கவனித்த அப்பகுதி மக்கள் உடனடியாக கால்வாயில் குதித்து அந்த பெண்ணை கயிற்றால் கட்டி பாதுகாப்பு சுவருக்கு கொண்டு வந்து மேலே கொண்டு வந்தனர்.

அந்த பெண்ணுக்கு எதுவும் ஆகாததால் அங்கிருந்த அனைவரும் நிம்மதி அடைந்தனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!