இது இந்தியா இல்லையா..? முகத்தில் தேசியக் கொடி வரைந்து பொற்கோவிலுக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் ; அதிர்ச்சி வீடியோ!!

Author: Babu Lakshmanan
18 April 2023, 8:50 am

பஞ்சாப் ; அமிர்தசரஸில் உள்ள பொற்கோவிலுக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த சம்பவம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சீக்கியர்களின் வழிபாட்டு தலமான பொற்கோவில் பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சென்று வழிபடுவது வழக்கம். அந்த வகையில், பெண் ஒருவர் தனது முகத்தில் தேசியக் கொடியை வரைந்து விட்டு, பொற்கோவிலுக்கு செல்ல முயன்றுள்ளார்.

அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர், அந்தப் பெண்ணை உள்ளே செல்லக் கூடாது என்று தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், இது இந்தியா இல்லையா..? என்று கேட்கிறார். அதற்கு அந்த காவலர் இல்லை இது பஞ்சாப் என்று சொல்கிறார்.

இதனால், கடுப்பான அந்தப் பெண் மீண்டும் மீண்டும் இது இந்தியா எல்லை என்று கேட்க, அவரோ இல்லை என்பது போல தலையசைக்கிறார். நடந்த இந்த சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்த அந்தப் பெண்ணின் செல்போனை பறிக்க அந்தக் காவலர் பறிக்க முயற்சிக்கிறார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், அந்த அதிகாரியின் செயலுக்கு பொற்கோயிலை நிர்வகிக்கும் ஷிரோமணி குருத்வாரா பிரபந்தக் கமிட்டி மன்னிப்பு கேட்டுள்ளது. அந்த பெண்ணின் முகத்தில் வரைந்திருந்த சின்னத்தில் அசோக சக்கரம் இல்லாததால் அது இந்திய கொடி அல்ல, அரசியல் கொடியாக இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!