ஜாமீன் தரலைனா உங்க குடும்பத்தினர் மீது போலி வழக்கு போட்டுருவேன் : சிபிஐ நீதிமன்ற நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த திரிணாமுல் காங்., பிரமுகர்!!

Author: Udayachandran RadhaKrishnan
24 August 2022, 8:24 am

திரிணமுல் காங்கிரஸ் பிரமுகர் அனுப்ரதா மொண்டல், கால்நடைகளை கடத்திய வழக்கில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். அவரை காவலில் எடுத்து சி.பி.ஐ., விசாரித்து வருகிறது.

இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் அசன்சால் மாவட்ட சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி ராஜேஷ் சக்கரவர்த்திக்கு மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதில், ‘இந்த வழக்கில் அனுப்ரதா மொண்டலுக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்படவில்லை எனில், உங்கள் குடும்பத்தார் மீது போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலி வழக்குப் பதிவு செய்யப்படும்’ என, மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

திரிணமுல் காங்கிரசை சேர்ந்த பப்பா சட்டர்ஜி என்பவரது பெயரில் இந்த கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால் அவர் அதை மறுத்துள்ளார். தன் பெயரில் யாரோ போலியாக கடிதம் அனுப்பி உள்ளதாக பப்பா சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

இந்த மிரட்டல் கடிதம் தொடர்பாக, பஸ்சிம் வர்த்தமான் மாவட்ட நீதிபதியிடம் சிறப்பு நீதிபதி ராஜேஷ் புகார் அளித்துள்ளார். இந்த விவகாரத்தை, கோல்கட்டா உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு எடுத்து செல்லவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  • cooku with comali season 6 new judge chef koushik இனி இவர்தான் குக் வித் கோமாளி நடுவரா? வீடியோ வெளியிட்டு அதிரடி காட்டிய விஜய் டிவி!