பக்கெட்ட கொண்டு வாங்க.. சீக்கிரம் : சமையல் எண்ணெய் ஏற்றி சென்ற லாரி விபத்து : போட்டி போட்டு அள்ளிய மக்கள்!

Author: Udayachandran RadhaKrishnan
5 July 2024, 2:28 pm

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் இருந்து பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் தம்மபேட் மண்டலம் காட்டுகுடேம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சமையல் எண்னெய் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கட்டுபாட்டை இழந்த சாலையோரம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இதில் சமையல் எண்னெய் வெளியேறுவதை அறிந்த அப்பகுதி மக்கள் போட்டியிட்டு கொண்டு பக்கெட், குடங்களில் எண்னெய்யை பிடித்து சென்றனர்.

இதனால் கூட்ட நெரிசலால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அதிகளவில் நிறுத்தப்பட்டன. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களை அங்கிருந்து அனுப்பி போக்குவரத்தை சரி செய்து கிரேன் வரவழைத்து லாரியை நிமிர்த்தினர். இந்த விபத்து குறித்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

  • red card issued to serial actress raveena daha இனி ஒரு வருஷத்துக்கு நடிக்க கூடாது- பிரபல சீரீயல் நடிகைக்கு ரெட் கார்டு? அதிர்ச்சியில் ரசிகர்கள்…