சாலையோரம் நடந்து சென்ற பட்டதாரி இளைஞர் மீது மோதிய லாரி : நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி வீடியோ!!

Author: Udayachandran RadhaKrishnan
18 April 2022, 8:01 pm

தெலுங்கானா : சாலையில் சென்று கொண்டிருந்த பட்டதாரி இளைஞர்கள் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தெலுங்கானா மாநிலம் பாரிட்டால கிராமத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன். பட்டதாரி இளைஞரான இவர் அவரது உறவினர் மருந்துக் கடையில் பணியாற்றி மேல் படிப்பு படித்து வருகிறார்.

நேற்று இரவு மருந்து கடையை மூடிவிட்டு தனது உறவினருடன் சாலையில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் இருந்து வந்த லாரி இவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனை கவனித்த உறவினர் செய்வதறியாமல் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அதற்குள்ளாக இதனை கவனித்த லாரி ஓட்டுனர் சாலை ஓரத்தில் வாகனத்தை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இளைஞரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

https://vimeo.com/700446815

மேலும் லாரி உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • actor sugumaran illegal relationship திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதல் பட நடிகர்…காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த துணை நடிகை..!
  • Views: - 1356

    0

    0