பிரேக் செயலிழந்து கட்டுப்பாட்டை இழந்த லாரி : கார் மீது விழுந்து நொறுங்கிய கோர விபத்தின் காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
16 February 2022, 11:38 am

ஜார்கண்ட் : பிரேக் செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்த லாரியால் கோர விபத்து ஏற்பட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜார்கண்ட் மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் சரக்கு லாரி ஒன்று வேகமாக வந்த கொண்டிருந்தது. அப்போது பிரேக் செயலிழந்ததால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் சென்று மற்ற வாகனங்கள் மீது மோதியது.

சிறிது தூரம் பல்வேறு வாகனங்களை இடித்து தள்ளிய லாரி ஒரு காரை நசுக்கி தலைகீழாக கவிழ்ந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் பலர் படுகாயடைந்துள்ளனர்.

இந்த விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • actress anagha ravi joined suriya 45 movie சூர்யா படத்தில் திடீரென இணைந்த டிரெண்டிங் நடிகை… அதுக்குள்ளவா?