‘டிக்கெட்டை எடு’… கேள்வி கேட்ட டிக்கெட் பரிசோதகர் ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டு கொலை… வடமாநில தொழிலாளி கைது…!!

Author: Babu Lakshmanan
4 April 2024, 8:55 am

ரயிலில் டிக்கெட் இன்றி பயணம் செய்த வட மாநில தொழிலாளியை தட்டி கேட்ட டிக்கெட் பரிசோதகர் ஶ்ரீ வினோத் என்பவர் ரயிலில் இருந்து தள்ளி விட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று முன்தினம் மாலை எர்ணாகுளத்தில் இருந்து பாட்னாவை நோக்கி சென்று கொண்டிருந்த எர்ணாகுளம் பாட்னா எக்ஸ்பிரஸ் ரயிலில், எஸ் 11 கோச்சில் டிக்கெட் பரிசோதனை செய்து வந்தார் மலையாளத் திரைப்பட துணை நடிகரும் டிக்கெட் பரிசோதகருமான வினோத்.

மேலும் படிக்க: ஓட்டு கேட்டு வராதீங்க.. உங்களுக்கு ஓட்டு போட மாட்டோம் : திமுகவினரை விரட்டிய பெண்.. வைரலாகும் வீடியோ!

அப்போது அதே பெட்டியில் கஞ்சன் மாவட்டத்தைச் சார்ந்த ரஞ்சனி காந்தா என்பவர் பயணம் செய்து வந்த நிலையில், அவரிடம் முறையான டிக்கெட் இல்லாதது தெரிய வந்தது. இதையடுத்து அவரை அடுத்த நிறுத்தத்தில் இறங்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதனால் கோபம் அடைந்த ரஞ்சனி காந்தா டிக்கெட் பரிசோதகரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டுள்ளார். இதில், அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதனை அடுத்து திருச்சூர் ரயில்வே போலீசார் கொலையாளியை கைது செய்து தற்போது விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க: மோடி ஒரு டுபாக்கூர்…. அண்ணாமலை ஒரு தவளை ; மிமிக்ரி செய்து பாஜகவை விமர்சித்த திண்டுக்கல் லியோனி..!!!

தமிழகம், கேரளா மாநிலங்களில் பல்வேறு ரயில்களில் வடமாநிலத்தவர்கள் முறையான டிக்கெட்கள் இன்றி, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணம் செய்வதும், இதனால் அவ்வப்போது தகராறு நிகழ்வதும் நடநது வந்த நிலையில், டிக்கெட் பரிசோதகர் ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் கேரள மாநிலத்தை உலுக்கி உள்ளது.

  • Varun Dhawan Keerthy Suresh viral video அட்லீ போனை பார்த்து கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சி…ஒரு டைரக்டர்-க்கு உண்டான மரியாதையே போச்சு…!
  • Views: - 534

    0

    0