ஏற்கனவே 2 பெண் குழந்தைகள்… மீண்டும் இரட்டை பெண் குழந்தைகளா…? விரக்தியில் தொழிலதிபர் செய்த காரியம்…!!

Author: Babu Lakshmanan
20 January 2023, 8:28 pm

2 பெண் குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததால் ஏற்பட்ட விரக்தியில் ஆற்றில் குதித்து தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேசம் பலஹட் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் வாசுதேவ் பாட்லி. தொழிலதிபரான இவருக்கு திருமணமாகி, 6 மற்றும் 4 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளன. இதனிடையே, பாட்லியின் மனைவி மீண்டும் கர்ப்பமடைந்துள்ளார். அவருக்கு நேற்று முன்தினம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது.

ஏற்கனவே இரு பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மனைவிக்கு மீண்டும் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்ததால் வாசுதேவ் மிகுந்த விரக்தி அடைந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன் தினம் மாலை 7 மணியளவில் வனிகங்கா ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் ஆற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்ட வாசுதேவின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!