12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள் : முயற்சி இருந்தால் முடியாதது எதுவும் இல்லை என நெகிழ்ச்சி!!
Author: Udayachandran RadhaKrishnan29 June 2022, 1:00 pm
தெலுங்கானா: சாதிப்பதற்கு முயற்சியை தவிர வேறு எதுவும் தடையாக இருக்க முடியாது என ஒட்டி பிறந்த தலையுடன் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி அடைந்த சகோதரிகள்.
தெலுங்கானா மாநில மகபூபாபாத் மாவட்டத்தை சேர்ந்த சகோதரிகள் வீனா,வாணி. கடந்த 2005ஆம் ஆண்டு தலை ஒட்டிய நிலையில் இரண்டு பேரும் பிறந்தனர். தலையில் அறுவை சிகிச்சை செய்து இரண்டு பேரையும் பிரிக்க ஏராளமான அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவ்வாறு அறுவை சிகிச்சை செய்தால் இரண்டு பேரின் உயிருக்கும் ஆபத்து ஏற்படும் என்று மருத்துவர்கள் எச்சரித்தனர்.
எனவே பிறந்தது முதல் ஒட்டிய தலையுடன் சகோதரிகள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் சிறப்பு ஏற்பாடாக தெலுங்கானா மாநில அரசின் பள்ளிக்கல்வித்துறை உத்தரவின் பேரில் ஆசிரியர்கள் சகோதரிகளின் வீட்டுக்கு சென்று தினமும் பாடம் நடத்தி வந்தனர்.
12ஆம் வகுப்பு படித்து வந்த இரண்டு பேரும் கடந்த மாதம் நடைபெற்ற பொதுத் தேர்வின் போது ஒட்டிய நிலையில் பிறந்த தலையுடன் தனித்தனியாக தேர்வு எழுதினர்.
நேற்று தேர்வு முடிவுகளை தெலுங்கானா மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இந்திரா ரெட்டி வெளியிட்டார். தேர்வு முடிவுகளில் வீணா 9.3 சதவிகித மதிப்பெண்களும், வாணி 9.2 சதவீத மதிப்பெண்களும் பெற்று தேர்ச்சி அடைந்த தெரியவந்தது.
அவர்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர். முதல் வகுப்பில் இருந்து இதுவரை இருவரும் எழுதிய தேர்வில் தோல்வி அடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.