பாலியல் வழக்கில் பரபரப்பு TWIST.. பிரிஜ் பூஷனுக்கு எதிராக கொந்தளித்த COURT..!!
Author: Udayachandran RadhaKrishnan26 April 2024, 8:59 pm
பாலியல் வழக்கில் பரபரப்பு TWIST.. பிரிஜ் பூஷனுக்கு எதிராக கொந்தளித்த COURT..!!
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக இருந்த பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அச்சுறுத்தியதாக கூறப்பட்டது.
இதையடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மத்தியில் எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக நாட்டின் முன்னணி மல்யுத்த நட்சத்திரங்கள் அவரை கைது செய்யக்கோரி மாதக்கணக்கில் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து அவர் மல்யுத்த நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கினார். எனினும், மல்யுத்த சம்மேளனத்திற்கு நடைபெற்ற தேர்தலில் பிரிஜ் பூஷனின் ஆதரவாளர் சஞ்செய் சிங் வெற்றி பெற்று தலைவராக தேர்வு ஆகினார். இது மல்யுத்த வீரர் வீராங்கனைகளுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்தது.
மேலும் படிக்க: இனி தப்பவே முடியாது.. குற்றவாளிகள் மீது அடுத்தடுத்து பாய்ந்த குண்டாஸ் : கோவை காவல்துறை அதிரடி ACTION!
இதனால் அதிர்ச்சியடைந்தத சாக்ஷி மாலிக் மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய் பெறுவதாக அறிவித்தார். இதனை தொடர்ந்து மல்யுத்த சம்மேளன தலைவராக சஞ்செய் சிங் தேர்வு செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரபல மல்யுத்த வீரர்கள், பதக்கங்களை, பத்மஸ்ரீ விருதை திருப்பி அனுப்பவதாக அறிவித்தனர்.
இவ்வளவு பஞ்சாயத்துக்கு நடுவில் டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இறுதி கட்ட விசாரணை ஏப்.18ம் தேதி கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் பிரியங்கா ராஜ்புத் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது பிரிஜ் பூஷணுக்காக ஆஜராகியிருந்த வழக்கறிஞர், “பாலியல் வன்கொடுமை வழக்கை மேலும் தீவிரமாக விசாரிக்க வேண்டும்” என்று கோரிக்கையை வைத்தார். இதனையடுத்து இந்த வழக்கின் உத்தரவு ஒத்தி வைக்கப்பட்டது.
இதனையடுத்து இன்று இந்த வழக்கு குறித்து உத்தரவு வெளியாகியுள்ளது. அதில் பிரிஜ் பூஷண் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை என்றும் பூஷண் மீதான பாலியல் வழக்கில் மே 7ம் தேதி குற்றச்சாட்டுகு்களை பதிவு செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாடு முழுவதும் லோக்சபா தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், பாஜக எம்பிக்கு எதிராக நீதிமன்றம் இப்படியொரு உத்தரவை பிறப்பித்திருப்பது, அக்கட்சியினரிடையே சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.