டோல்கேட்டில் குடுமிப்பிடி சண்டை போட்ட பெண்கள் ; சுற்றி நின்று வேடிக்கை பார்த்த ஆண்கள்…வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!
Author: Babu Lakshmanan16 September 2022, 11:26 am
மகாராஷ்ராவில் நடுரோட்டில் இருபெண்கள் குடுமிப்பிடி சண்டை போட்ட காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே சுங்கச்சாவடிகளை அமைத்து சுங்கக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த சுங்கச்சாவடிகளை தனியார் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அப்படி சுங்கக்கட்டணம் வசூலிக்கும் சுங்கச்சாவடிகளில் அடிக்கடி மோதல்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது.
சுங்கக்கட்டணம் வசூலிக்கும் போது அங்கு பணியாற்றும் ஊழியர்கள், வாகன ஓட்டிகளிடையே தகராறு ஏற்படுகிறது.
இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சுங்கச்சாவடியில் கட்டண வசூல் தொடர்பாக எழுந்த மோதலில் இரு பெண்கள் குடுமிப்பிடி சண்டையிட்ட காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த சண்டையின் காரணமாக, சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.