இரண்டு அமைச்சர்கள் திடீர் ராஜினாமா… கேரளாவில் பரபரப்பு : தேதியுடன் வெளியான முக்கிய அறிவிப்பு!!!
Author: Udayachandran RadhaKrishnan25 December 2023, 8:22 am
கேரளாவில் இரண்டு அமைச்சர்கள் திடீர் ராஜினாமா… தேதியுடன் வெளியான முக்கிய அறிவிப்பு!!!
கேரளாவை ஆளும் இடது ஜனநாயக முன்னணி கூட்டத்தில், 5 ஆண்டுகள் அமைச்சரவையில் இரண்டரை ஆண்டுகள் ஒருவர் அமைச்சராகவும், அடுத்த இரண்டரை ஆண்டுகள் மற்றொருவர் அமைச்சராகவும் இருப்பது என முடிவெடுத்தனர்.
இதன்படி காங்கிரஸ் எஸ் கட்சியின் அமைச்சராக அகமது தேவர்கோவில், காங்கிரஸ் பி கட்சி சார்பில் ஆண்டனி ராஜா ஆகியோர் அமைச்சர்களாகினர்.
இவர்கள் பதவியேற்று இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்தன. இதையடுத்து நேற்று திருவனந்தபுரத்தில் நடைபெற்ற இடது ஜனநாயக முன்னணி கூட்டத்தில் ஏற்கனவே மேற்கொண்ட முடிவின்படி இருவரும் தங்கள் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர்.
அவர்களுக்கு பதிலாக காங்கிரஸ் எஸ் கட்சியைச் சேர்ந்த ராமச்சந்திரன் கடனப்பள்ளி, காங்கிரஸ் பி கட்சியைச் சேர்ந்த கணேஷ்குமார் ஆகிய இருவரும் வரும் 29-ந்தேதி அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.