வினேஷ் போகத் வழக்கில் யாரும் எதிர்பாரா திருப்பம்.. நீதிமன்றம் ஆர்டர்.. ரசிகர்கள் அதிருப்தி!

Author: Udayachandran RadhaKrishnan
11 August 2024, 10:25 am

பாரீஸ் ஒலிம்பிக்கில் பெண்கள் 50 கிலோ எடைப்பிரிவுக்கான மல்யுத்த இறுதிப்போட்டிக்கு இந்திய வீராங்கனை வினேஷ் போகத் தகுதி பெற்றிருந்தார்.
அவர் இறுதிப் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த சாரா ஹில்டெப்ரண்ட்-ஐ எதிர்கொள்ள இருந்தார்.

ஆனால் வினேஷ் போகத் உடல் எடை சில கிராம்கள் வரை கூடி இருப்பதால் அவர் தகுதிநீக்கம் செய்யப்பட்டதாக ஒலிம்பிக் கமிட்டி அறிவித்தது. இதையடுத்து, தனது தகுதி நீக்கத்திற்கு எதிராக விளையாட்டுக்கான நடுவர் நீதிமன்றத்தில் வினேஷ் போகத் முறையிட்டுள்ளார். இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்ற தமக்கு வெள்ளிப் பதக்கம் பகிர்ந்து அளிக்கவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த விவகாரத்தில் ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கப்படும் என சர்வதேச விளையாட்டு நடுவர் மன்றம் அறிவித்தது. அதன்படி ஆகஸ்டு 11-ந் தேதி தீர்ப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வினேஷ் போகத் விவகாரத்தில் மேல்முறையீடு தீர்ப்பு 13-ந் தேதித்து ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இப்படி நாட்கள் தள்ளிப் போவது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

  • ajith kumar receive padma bhushan award from president நீங்க வேற மாதிரி சார்…நாட்டின் உயரிய விருதை பெற்றுக்கொண்டார் அஜித்!