மறக்க முடியாத நாள்… துடிப்பான பங்களிப்பால் இந்தியா மீண்டும் வரலாறு படைத்துள்ளது : கடிதம் மூலம் பிரதமர் மோடி பாராட்டு!!

Author: Udayachandran RadhaKrishnan
20 July 2022, 11:29 am

தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டவர்களை பிரதமர் மோடி பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.

கொரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் செலுத்தப்படுகின்றன.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி 200 கோடி டோஸ் என்ற மைல்கல்லை கடந்து சாதனை படைத்துள்ளது. 18 மாதங்களில் 200 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில், இந்தியாவில் 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை செய்துள்ளதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்த்துள்ளார்.

தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டவர்களை பிரதமர் மோடி பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். மேலும் தடுப்பூசி செலுத்தியோருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்

கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் போரில் மறக்க முடியாத நாள் அனைவரது துடிப்பான பங்களிப்பால் இந்தியா மீண்டும் வரலாறு படைத்துள்ளது என அவர் தெரிவித்துளளார்

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…