வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க போட்ட சதி முறியடிப்பு… சாமர்த்தியமாக செயல்பட்ட ரயில் பைலட்டுகள்.. வைரலாகும் வீடியோ!!
Author: Babu Lakshmanan2 October 2023, 8:05 pm
ராஜஸ்தானில் வந்தே பாரத் விரைவு ரயிலை கவிழ்க்க போடப்பட்ட சதித்திட்டம் ரயில் பைலட்டுகளின் சாமர்த்தியத்தால் முறியடிக்கப்பட்டது.
உதய்பூர் – ஜெய்பூர் வந்தே பாரத் விரைவு ரயிலை கவிழ்க்க சிலர் சதித்திட்டம் போட்டுள்ளனர். இதற்காக, ரயில் தண்டவாளத்தில் கற்களும், இரும்பு ராடுகளும் வைத்திருந்தனர். ஆனால், ரயில் பைலட்டுகளும், ரயில்வே பணியாளர்களும் இதையறிந்து, சாமர்த்தியமாக செயல்பட்டு, ரயிலை நிறுத்தினர்.
இதனால், ராஜஸ்தானில் வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க செய்த நாசவேலை செய்யும் முயற்சி முறியடிக்கப்பட்டது. உஷாரான ரயில்வே ஊழியர்கள், உடனடியாக தண்டவாளத்தை சீர் செய்து அசம்பாவிதத்தை தடுத்தனர்.
இந்த சம்பவம் சுமார் 9:55 மணியளவில் நடந்தது. இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், கங்கரர் – சோனியானா பிரிவில் உள்ள பாதையில் கற்கள் மற்றும் இரண்டு ஒரு அடி கம்பிகள் வைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது.