நாடு முழுவதும் ரசாயனம் இல்லா இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும் : மத்திய நிதியமைச்சர் பட்ஜெட் உரை..!!

Author: Rajesh
1 February 2022, 11:43 am

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2022-23ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.

2022-23 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நாடாளுமன்றம் கூடியதும் பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர் பட்ஜெட் உரையை தொடங்கி பேசி வருகிறார். அவரது உரையில் கூறியிருப்பதாவது,

மலைப் பகுதிகளில் போக்குவரத்து மற்றும் தொடர்பு வசதியை மேம்படுத்த தனியார் பங்களிப்புடன் திட்டம்

உள்ளூர் வணிகங்களை மேம்படுத்த ஒரு ரெயில் நிலையம், ஒரு உற்பத்தி பொருள் திட்டம் கொண்டு வரப்படும்.

உள்நாட்டில் எண்ணெய் வித்துகள் உற்பத்தி அதிகரிக்க நடவடிக்கை

வேளாண் பொருட்களுக்கு ரூ.2.73 லட்சம் கோடி குறைந்தபட்ச ஆதரவு விலையாக வழங்கப்பட்டுள்ளது

புதிய ஊரக தொழில் மற்றும் வேளாண் நிறுவனங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

கிருஷ்ணா நதி – பெண்ணாறு – காவிரி நதி நீர் இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்

ஆத்மநிர்பர் பாரத் என்ற தற்சார்பு இந்தியா திட்டம் பெரியளவில் வளர்ச்சியை கண்டுள்ளது

அவசர கால கடன் உதவி திட்டங்கள் மூலம் 1.30 கோடி சிறு, குறு தொழில் நிறுவனங்கள் பலன் பெற்றுள்ளன

ரூ. 44 ஆயிரம் கோடியில் நீர்ப்பாசன திட்டங்கள் நிறைவேற்றப்படும்.

நீர்ப்பாசன இணைப்பு திட்டம் ரூ.46, 605 கொடி செலவில் நிறைவேற்றப்படும்.

டிரோன்கள் மூலம் பயிர்களை ஆய்வு செய்ய திட்டம். நாடு முழுவதும் ரசாயனம் இல்லா இயற்கை விவசாயம் ஊக்குவிக்கப்படும்

கல்வி ஒளிபரப்பிற்காக 200 டிவி சேனல்கள் உருவாக்கப்படும் – நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் இணைப்பு திட்டத்தின்கீழ் 60,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது

நாட்டின் பல்வேறு பகுதிகளில் டிஜிட்டல் பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 2217

    0

    0