மீண்டும் வெற்றி பெற்றார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் : கர்நாடகாவில் இருந்து மாநிலங்களவை தேர்வு..!!!
Author: Udayachandran RadhaKrishnan10 June 2022, 9:46 pm
கர்நாடகாவில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தல் முதல் சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன.
மாநிலங்களவையில் நாடு முழுவதும் 15 மாநிலங்களைச் சேர்ந்த 57 உறுப்பினர் பதவிகள் காலியாகியுள்ளன. இதில் தமிழகம் உள்பட 11 மாநிலங்களில் 41 உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வான நிலையில், மீதம் உள்ள16 இடங்களுக்கு மட்டுமே இன்று வாக்குப்பதிவு நடத்தப்பட்டது.
அதன்படி கர்நாடக , ஹரியானா, ராஜஸ்தான், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் காலியாக உள்ள 16 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றன. மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
இந்நிலையில் கர்நாடகாவில் நடைபெற்ற ராஜ்யசபா தேர்தல் முதல் சுற்று முடிவுகள் வெளியாகியுள்ளன. கர்நாடகாவில் இருந்து போட்டியிட்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் 46 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
கர்நாடக காங்கிரஸ் சார்பில் முதல் வேட்பாளராக களம் இறங்கிய முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் 46 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.