‘முதல்ல அவங்கள ஹாஸ்பிட்டல் கொண்டு போங்க’: விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய மத்திய அமைச்சர்…பைக்கில் சென்ற வீடியோ வைரல்..!!

Author: Rajesh
24 April 2022, 10:58 am

கர்நாடகா: மத்திய இணை அமைச்சர் காரில் சென்ற வழியில் விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றிய வீடியோ இணையத்தில் படுவைரலாகி வருகிறது.

கர்நாடக மாநிலம் புத்துரைச் சேர்ந்தவர் ஷோபா கரன்ட்லஜே. இவர் கர்நாடக மாநில பா.ஜ.க.வின் மிக முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக உள்ளார். இவர் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நல இணை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

ஷோபா மிகவும் இளம் வயதிலேயே ஆர்.எஸ்.எஸ்.ஸில் இணைந்தவர். ஆர்.எஸ்.எஸ்.ஸுக்காக தனது வாழ்வை அர்ப்பணித்தவர். திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டவர். 1994-ம் ஆண்டில் சகுந்தலா ஷெட்டியுடன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். தற்போது, கர்நாடக மாநில பா.ஜ.க. துணைத் தலைவராக இருக்கிறார்.

கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பாவின் அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக இருந்தவர். இவர், இந்துத்துவா கொள்கைகளில் உறுதியான பிடிப்பு கொண்டவர். அதேபோல, அரசியல் மற்றும் சமூக வாழ்விலும் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டவர். கும்ரதாரா நதியின் குறுக்கே அணை கட்டுவதை தீவிரமாக எதிர்ப்பவர்.

உடுப்பி மாவட்டம் சிக்மங்களூர் தொகுதி எம்.பி.யான இவர், தற்போது மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில், நேற்று பிற்பகலில் தனது இன்னோவா காரில் சொந்த ஊரை நோக்கிச் சென்று கொண்டிருந்தார் ஷோபா கரன்ட்லஜே.

அப்போது, வழியில் இரு கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இதில் பயணம் செய்த பலரும் படுகாயமடைந்தனர். இதைப் பார்த்த மத்திய அமைச்சர் ஷோபா கரன்டலஜே, தனது காரில் இருந்து இறங்கிக் கொண்டதோடு, காயமடைந்தவர்களை தனது காரில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். பின்னர், அவ்வழியாக வந்த ஒரு டூவீலரில் ஏறி தனது வீட்டுக்குச் சென்றார்.

இச்சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழச் செய்தது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

  • Bala and Kanja Karuppu relationship OFFICE BOY-யா வேல செஞ்ச பிரபல காமெடி நடிகர்…வாழ்க்கை கொடுத்த இயக்குனர் பாலா..!
  • Views: - 1349

    0

    0