முதல்முறையாக தேர்தலில் போட்டியிடும் மத்திய அமைச்சர்கள்…எந்த தொகுதி தெரியுமா? பாஜகவின் மாஸ்டர் மூவ்!

Author: Udayachandran RadhaKrishnan
27 February 2024, 2:30 pm

முதல்முறையாக தேர்தலில் போட்டியிடும் மத்திய அமைச்சர்கள்…
எந்த தொகுதி தெரியுமா? பாஜகவின் மாஸ்டர் மூவ்!

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியேரை களத்தில் இறக்கி விட பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

தேர்தலை எதிர்கொள்ளாமல் இருவரும் பதவி வகித்து வரும் சூழலில், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோர் கேரளா மாநிலம் திருவனந்தபுரம், கர்நாடகாவின் பெங்களூர் வடக்கு, பெங்களூர் தெற்கு உள்ளிட்ட தொகுதிகளில் ஏதேனும் ஒன்றில் போட்டியிடலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து பேசிய பிரகலாத் ஜோஷி, நாடாளுமன்ற தேர்தலில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். நான் யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. பாஜக என்பது தேசிய கட்சி. இந்த விஷயத்தில் கட்சி மேலிட தலைவர்கள் தான் இறுதி முடிவு எடுப்பார்கள் எனகூறியுள்ளார்.

  • Nayanthara Test movie news சிம்பு பிறந்த நாளுக்கு நயன்தாரா எடுக்க போகும் திடீர் முடிவு…ரசிகர்களுக்கு செம ட்விஸ்ட்..!