திருப்பதி மலையில் கட்டுக்கடங்காத கூட்டம் : தரிசனம் செய்ய 48 நேரம் காத்திருக்கும் பக்தர்கள்… பாதுகாப்பு பணியில் தேவஸ்தானம் தீவிரம்!!

Author: Udayachandran RadhaKrishnan
12 June 2022, 7:11 pm

ஆந்திரா : திருப்பதி மலையில் கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

ஞாயிறு மற்றும் கோடைவிடுமுறை ஆகியவற்றின் காரணமாக திருப்பதி மலைக்கு ஏராளமான அளவில் பக்தர்கள் வந்து குவிந்துள்ளனர். இதனால் திருப்பதி மலையில் திரும்பிய பக்கமெல்லாம் மனித தலைகளாகவே காணப்படுகின்றன.

பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதன் காரணமாக திருமலையில் தங்கும் அறைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மணிக்கணக்கில் வரிசையில் காத்திருந்தாலும் தங்கும் அறைகள் கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலவச தரிசனத்திற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளதால் 48 மணி நேரம் வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை இலவசமாக வழிபட வேண்டிய நிலை நிலவுகிறது.

திருப்பதி மலையில் உள்ள வைகுண்டம் காத்திருப்பு மண்டபத்தின் அறுபத்தி நான்கு அறைகளும் நிரம்பி விட்ட நிலையில் அங்கிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் நீளம் பக்தர்களுக்கு இலவச தரிசனத்திற்காக வரிசையில் காத்திருக்கின்றனர்.

பக்தர்கள் வருகை அதிகரிப்பு காரணமாக இரண்டு லட்டுக்கள் மட்டுமே ஒவ்வொரு பக்தருக்கும் தற்போது வழங்கப்படுகிறது. எனவே கூடுதல் லட்டு பிரசாதம் வாங்கிச் செல்லலாம் என்று வந்திருந்த பக்தர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

வரிசையில் காத்திருக்கும் பக்தர்களுக்கு உணவு, குடிநீர், டீ, காபி ஆகிய அடிப்படை வசதிகளை தேவஸ்தான நிர்வாகம் செய்து கொடுத்துள்ளது.

  • shruti haasan talks about her relationship failures ஒரே ஒரு கேள்வி இப்படி பேச வைச்சிடுச்சே! ஸ்ருதிஹாசனுக்கு இப்படி ஒரு நிலைமையா வரணும்?