சாலையில் சென்ற பேருந்தில் தீவிபத்து… முழுவதும் எரிந்து சாம்பல் ; 10 பேர் உடல் கருகி பரிதாப பலி!!

Author: Babu Lakshmanan
11 March 2024, 5:10 pm

உத்தரபிரதேசம் அருகே மின்கம்பியில் பேருந்து உரசியதால் ஏற்பட்ட தீவிபத்தில் 10 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் – காசிப்பூரில் திருமண நிகழ்வுக்காக 30க்கும் மேற்பட்டோர் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, உயர் அழுத்த மின் கம்பியில் உரசியதால், பேருந்தில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், பேருந்து முழுவதும் தீயில் எரிந்து நாசமானது. கொளுந்து விட்டு எரிந்த தீயில் சிக்கி 10 பேர் பலியாகினர். பேருந்து தீப்பிடித்து எரிந்ததை பார்த்து அருகில் வசிக்கும் பொதுமக்கள் ஓடிவந்து தீயை அணைத்தனர்.

இந்த பேருந்து தீவிபத்து தொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • ags condition for producing str 50 பிரச்சனையையே போர்வையாக போர்த்திக்கொண்டு தூங்கும் சிம்பு பட இயக்குனர்! மீண்டும் மீண்டுமா?