உ.பி.யில் ஆட்சியைப் பிடிக்கும் யோகி.. உத்தரகாண்டில் மீண்டும் காவிக்கொடி : பஞ்சாப்பில் ஆட்சியை இழக்கும் காங்கிரஸ் : வெளியானது கருத்துக்கணிப்பு

Author: Babu Lakshmanan
8 February 2022, 8:10 pm

சென்னை : பிரபல செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் உத்தரபிரதேசம் மட்டுமல்லாது உத்தரகாண்டிலும் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலின் முன்னோட்டமாக பார்க்கப்படும் உத்தரபிரதேச சட்டப்பேரவை தேர்தலை, இந்த நாடே உற்று கவனித்து வருகிறது. மிகப்பெரிய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மொத்தம் 403 தொகுதிகள் உள்ளன. இந்த மாநிலத்தில் பிப்., 10 முதல் மார்ச் 7ம் தேதி வரையில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. பாஜக கூட்டணி, காங்கிரஸ் கூட்டணி, சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், சிவசேனா ஆகிய கட்சிகள் தங்களின் வேட்பாளரை அறிவித்து, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

மீண்டும் ஆட்சியைத் தக்க வேண்டும் என்ற முனைப்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆதித்யநாத் போன்றோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மற்றொரு புறம் எப்படியாவது ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்ற நோக்கத்தில் அகிலேஷ் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இவர்களை தவிர மாயாவதி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரும் உள்ளனர். ஒவ்வொரு நாளும் ஒரு அப்டேட்டுடன் உத்தரபிரதேச தேர்தல் களம் எப்போதும் பரபரப்பாகவே காணப்படுகிறது.

202 தொகுதிகளை கைப்பற்றினால் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நிலையில், ஏற்கனவே நடத்தப்பட்ட 6 கருத்துக்கணிப்புகளில் பாஜகவே ஆட்சியை தக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

yogi_adityanath_updatenews360

இந்த நிலையில், வாக்குப்பதிவுக்கு முந்தைய முதற்கட்ட கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இந்தியா நியூஸ் ஜான் கி பாத் என்ற நிறுவனம் நடத்தியுள்ள இந்த கருத்துக்கணிப்பில் மீண்டும் உத்தரப் பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றுவார் என தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக, 228 முதுல் 254 இடங்களை பாஜக கைப்பற்றும் என்றும், 41.3 சதவீதம் முதல் 43.5 சதவீதம் வரை வாக்குகளைப் பெறலாம் என கணிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், யோகி ஆதித்யநாத் மீண்டும் முதலமைச்சராகப் போவது உறுதியாகி விட்டது.

அதேபோல, 2வது இடத்தை சமாஜ் வாதி கட்சிகூட்டணி பிடிக்கும் எனத் தெரிய வந்துள்ளது. அந்தக் கூட்டணிக்கு 35.5% முதல் 38% வாக்குகள் கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது. காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி இரண்டும் ஒற்றை இலக்க எண்களிலான இடங்களையே கைப்பற்ற கூடும் என்று கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பாஜக மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என அம்மாநிலத்தில் 70% பெண்கள் விரும்புவதாகவும், அவர்கள் பாஜகவுக்கு சாதகமாக செயல்படுவதாகவும் கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

BJP_FLAG_UpdateNews360

இதேபோல, 70 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட உத்தரகாண்டில் மீண்டும் பாஜகவே ஆட்சியமைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. காங்கிரசுடன் குறைந்த இடங்கள் வித்தியாசத்தில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என்று கணித்துள்ளது. மொத்தம் 70 தொகுதிகள் கொண்ட சட்டசபையில் 34-39 தொகுதிகளை பாஜக கைப்பற்றும் என்றும், காங்கிரஸ் 27-33 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப்பில் காங்கிரஸை நீக்கிவிட்டு கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி ஆட்சியமைக்கும் என்று கருத்துக் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.

  • AR Rahman Sons Defends his father against Rumours அப்பா குறித்து தப்பா பேசாதீங்க… ஏஆர் ரகுமான் மகன் போட்ட பதிவு!
  • Views: - 1082

    0

    0