மதுரா கிருஷ்ணர் கோவிலில் அலைமோதிய கூட்டம் : நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் பலி.. பலர் படுகாயம்

Author: Babu Lakshmanan
20 August 2022, 9:41 am

உத்தரபிரதேசம் : மதுராவில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் நிலவிய கூட்ட நெரிசலில் சிக்கி 2 பக்தர்கள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்துக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. கிருஷ்ணர் பிறந்த ஊராக கூறப்படும் உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுராவில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, மதுராவில் உள்ள பாங்கே பிகாரி கிருஷ்ணர் கோவிலில் நேற்று நள்ளிரவு கொண்டாடங்கள் களைகட்டியது. அதில், பங்கேற்க அதிக அளவு பக்தர்கள் கோவிலில் திரண்டனர். அப்போது, வழிபாட்டின் போது கோவிலுக்குள் செல்ல பக்தர்கள் முயலும் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

இந்த கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சு திணறல் ஏற்பட்டு 2 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

  • Famous Malaysian singer commits suicide? Tragic end with mother!! பிரபல நடிகர் தற்கொலை? 11வது மாடியில் இருந்து குதித்து விபரீத முடிவு!!