இறந்த புலியை சமைத்து சாப்பிட்ட கிராம மக்கள் : ஷாக் ஆன வனத்துறை!!

Author: Udayachandran RadhaKrishnan
20 February 2023, 12:37 pm

மின்சாரம் பாய்ந்து இறந்த புலியை சமைத்து சாப்பிட்ட கிராம மக்களால் வனத்துறை அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ஆக்கபள்ளம் கிராமத்தில் கடந்த பத்தாம் தேதி நடந்த இந்த சம்பவத்தில் மின்சாரம் பாய்ந்து இறந்த பெண் புலியை கிராம மக்கள் சமைத்து சாப்பிட்டு விட்டனர்.

இது தொடர்பாக 12 பேரை பிடித்து வனத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தி உள்ளனர். ஆக்கபள்ளம் கிராம விவசாயிகள் விளைநிலங்களில் வனவிலங்குகள் புகுந்து சேதம் விளைவிக்காமல் தவிர்ப்பதற்காக சட்டத்துக்கு புறம்பான வகையில் மின்சார வேலி அமைத்துள்ளனர்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன் ஆக்கபள்ளம் அருகே வனப்பகுதியில் பெண் புள்ளி ஒன்றின் கால் தடத்தை கண்டுபிடித்த வனத்துறை அதிகாரிகள் புலி நடமாட்டத்தை கண்டுபிடிப்பதற்காக அந்த பகுதியில் கேமராக்களை பொருத்தி இருந்தனர்.

ஆனால் அதற்கு முன்னதாகவே அந்த புலி மின்சாரம் தாக்கி இறந்து கிராம மக்களுக்கு உணவாகிவிட்டது.

புலியின் கறியை பங்கு போடுவதில் ஆக்கப்பள்ளம் கிராம மக்கள் இடையே பிரச்சனை ஏற்பட்டு இந்த விஷயம் வனத்துறையினருக்கு தெரிய வந்தது.

எனவே ஆக்கப்பள்ளம் கிராமத்திற்கு நேற்று சென்ற வனத்துறை புலி மாமிசம் சாப்பிட்டவர்கள் என்று கருதப்படும் சிலரை வனத்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்து செல்ல முயன்றனர்.

இதனால் கிராம மக்களுக்கும் வனத்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் 12 பேரை பிடித்து சென்ற வனத்துறையினர் அவர்களிடம் நடத்திய விசாரணையின் போது இறந்து போன புலியின் உடலை எடுத்து வந்து வெட்டி சமைத்து சாப்பிட்டதை அவர்கள் ஒப்பு கொண்டனர்.

மேலும் புலி தோலை அங்குள்ள பாலடைந்த கிணறு ஒன்றில் வீசிவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

இதன் அடிப்படையில் இன்று அந்த பாலடைந்த கிணற்றில் இருந்து புலித்தோலை மீட்க வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

இதற்கு இடையே புலி மாமிசம் சாப்பிட்ட மேலும் பலர் அந்த கிராமத்தில் இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அவர்களையும் கைது செய்யும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

  • Joshua Sridhar music journey இதெல்லாம் ஒரு இசையா…காது கொடுத்து கேட்க முடியல…பிரபல இசையமைப்பாளர் கொந்தளிப்பு..!
  • Views: - 574

    0

    0