விராட் கோலி – அனுஷ்கா தம்பதிக்கு ஆண் குழந்தை… குட்நியூஸ் சொன்ன கையோடு ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோள்..

Author: Babu Lakshmanan
21 February 2024, 9:02 am

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி – நடிகை அனுஷ்கா தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கடந்த 2017ம் ஆண்டு பாலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, 2021ம் ஆண்டு அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், அதற்கு வாமிகா என பெயர் சூட்டினார்.

இந்த நிலையில், அனுஷ்கா ஷர்மா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகி வந்தது. ஆனால், இது குறித்து விராட் கோலியும், அனுஷ்கா ஷர்மாவும் எந்தவித பதிலும் அளிக்காமல் இருந்து வந்தனர்

இந்த சூழலில், இங்கிலாந்து அணிக்கு எதிராக இந்திய அணி விளையாடி வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் விராட் கோலி பங்கேற்க மாட்டார் என தெரிவிக்கப்பட்டது. சொந்த காரணங்களுக்காக அவர் பங்கேற்க மாட்டார் என்று கூறப்பட்டிருந்தது. ஆனால், எஞ்சிய 3 போட்டிகளில் இருந்தும் பின்னர் விலகினார்.

இந்த நிலையில், விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா தம்பதி தங்களின் சமூகவலைதள பக்கத்தில், இரண்டாவது குழந்தை பிறந்த தகவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கடந்த 15 ஆம் தேதி தங்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அந்த தகவலை மிகுந்த மகிழ்ச்சியுடன் தெரிவிக்க விரும்புகிறோம்.

மேலும், குழந்தைக்கு அகாய் என்ற பெயரை சூட்டி இருக்கிறோம். வாமிகாவின் தம்பியை மகிழ்ச்சியுடன் இந்த உலகத்திற்கு வரவேற்கிறோம். இந்த அழகான தருணத்தில் அனைவரின் ஆசீர்வாதத்தையும் வாழ்த்துகளையும் பெற விரும்புகிறோம். தற்போது தங்களுக்கு தனிமை தேவைப்படுவதால் அதை ரசிகர்கள் மதிக்க வேண்டும், என கேட்டுக்கொண்டுள்ளார்.

  • Viduthalai Part 2 OTT releaseஅவ்ளோ தான் முடிச்சு விட்டீங்க போங்க…விடுதலை 2 ஓடிடி-க்கு ஓட்டம்..வெளிவந்த அப்டேட்..!
  • Views: - 1429

    0

    0