விஸ்வகுரு படுதோல்வி அடைந்துள்ளார்… இது மீட்டெடுக்கும் நேரம் : அமைச்சர் உதயநிதி கடும் விமர்சனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
29 September 2023, 4:35 pm

விஸ்வகுரு தோல்வி அடைந்துள்ளார்… பிரதமர் மோடியை தவறிவிட்டார் : அமைச்சர் உதயநிதி கடும் விமர்சனம்!!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது இம்மாநிலம் பதற்றம் நிறைந்த மாநிலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கு சட்டம் ஒழுங்கை மீட்டெடுக்க பிரதமர் மோடி தவறிவிட்டார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மணிப்பூரில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இணைய சேவை மீண்டும் இரு தினங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டது. அப்போது சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போன மாணவர்கள் இருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்கிற தகவல் வெளியாகியது. எனவே மாணவர்கள் தீவிர போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

இப்படி இருக்கையில் நேற்று அம்மாநில முதலமைச்சர் பிரனே் சிங்கின் பூர்வீக வீட்டில் அடையாளம் தெரியாத இரண்டு கும்பல்கள் தாக்குதல் நடத்த முயன்றிருக்கிறது.

இதனை பாதுகாப்பு படையினரும், காவல்துறையினரும் முறியடித்துள்ளனர். இந்நிலையில், இங்கு சட்டம் ஒழுங்கை மீட்க பிரதமர் மோடி தவறிவிட்டார் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

அதாவது, மணிப்பூரில் நடந்து வரும் வன்முறை மிகுந்த கவலை அளிக்கிறது. எல்லாவற்றையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகக் கூறிக்கொள்ளும் ‘விஸ்வகுரு’ மணிப்பூரில் சட்டம் ஒழுங்கை மீட்டெடுப்பதில் படுதோல்வி அடைந்துள்ளார்.

இணைய சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டதன் மூலம், இரண்டு மெய்தி மாணவர்கள் கொல்லப்பட்டது போன்ற பயங்கரமான சம்பவங்களை அம்பலமாகியுள்ளன. இது முழு நாட்டையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
வன்முறையை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, அரசாங்கம் மீண்டும் இணைய சேவையை நிறுத்தியுள்ளது. மாநில மற்றும் யூனியனில் உள்ள பிஜேபி அரசாங்கங்கள் பொறுப்பேற்று மணிப்பூரைக் காப்பாற்ற வேண்டிய நேரம் இது என்று x சோஷியல் மீடியா தளத்தில் கூறியுள்ளார்.

  • Salman Khan Sikandar movie updates சல்மான் கான் போட்ட திடீர் கண்டிஷன்..ஏ.ஆர்.முருகதாஸுக்கு வந்த சிக்கல்..அப்போ SK-23..?
  • Views: - 477

    0

    0