விஸ்வரூபம் எடுக்கும் ஐடி ரெய்டு… சிக்கலில் துணை முதலமைச்சர் : மத்திய அரசு காரணமா?!!

Author: Udayachandran RadhaKrishnan
19 October 2023, 6:58 pm

விஸ்வரூபம் எடுக்கும் ஐடி ரெய்டு… சிக்கலில் துணை முதலமைச்சர் : மத்திய அரசு மீது பழி?!!

கர்நாடக துணை முதல்வரும் , அம்மாநில நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமாருக்கு சொந்தமான வீடு மற்றும் அலுவலகங்களில் கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது சுமார் 7.4 கோடி ரூபாய் கணக்கில் வராமல் இருந்ததாக கூறப்பட்டது.

இதனை அடுத்து சட்டவிரோத பணபரிவர்தனைகளை விசாரிக்கும் அமலாக்கத்துறையின் பரிந்துரையின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்து தங்கள் விசாரணையை தொடர்ந்தது.

இந்த சிபிஐ விசாரணையானது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக நடத்தப்படுகிறது எனவே சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் டி.கே.சிவகுமார் வழக்கு தாக்கல் செய்து இருந்தார் .

டி.கே.சிவகுமார் தாக்கல் செய்த வழக்கு கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி நடராஜன் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு , இன்று முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அதில், சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க முடியாது என கூறி, இந்த வழக்கிற்கு சிபிஐ விசாரிக்க தடையில்லை இன்னும் 3 மாதத்திற்குள் இறுதி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

இது தொடர்பாக இன்று, செய்தியாளர்களிடம் பேசிய டி.கே.சிவகுமார், இந்த வழக்கு தொடர்பாக எந்த நடவடிக்கையாக இருந்தாலும் அதற்கு முழு ஒத்துழைப்பு தருவேன். நமது நாட்டின் சட்டத்தை மதிக்கிறேன். நான் குற்றமற்றவன் என்பது எனக்கு தெரியும். நான் எந்த தவறும் செய்யவில்லை. என் ஆவணங்கள் சுத்தமாக உள்ளன. நான் தவறு செய்யாதவன். இது பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும் என்றும் டி.கே.சிவகுமார் தெரிவித்தார்.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?