பல பதக்கங்களை குவித்த வாலிபால் வீராங்கனை திடீர் மரணம் : அதிர்ச்சி சம்பவம்!!!
Author: Udayachandran RadhaKrishnan31 May 2023, 7:11 pm
கர்நாடக மாநிலம் பெல்தங்கடி தாலுக்காவில் உள்ள படங்கடி பொய்குடே பகுதியைச் சேர்ந்த ஆதம் மற்றும் ஹவ்வம்மா தம்பதியரின் மகள் சாலியத் (வயது 24).
இவர் தேசிய அளவிலான வாலிபால் வீராங்கனை. இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றது. இவர் கடந்த ஒரு வருடமாக சிக்கமகளூரில் உள்ள கணவர் வீட்டில் தங்கி இருந்தார்.
நேற்று (செவ்வாய்க்கிழமை) அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து உடனடியாக மங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார்.
சாலியத் தேசிய கைப்பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம், சீனியர் தேசிய தென் மண்டலப் போட்டியில் தங்கப் பதக்கம் மற்றும் ஜூனியர் தேசிய போட்டியில் மூன்றாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான வாலிபால் போட்டியில் கர்நாடக மாநில அணியை இரண்டாம் இடத்திற்கு கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகித்தார்.