பஞ்சாபில் கணிப்புகளை பின்னுக்கு தள்ளிய ஆம் ஆத்மி : தொண்டர்களுடன் வெற்றியை உற்சாகமாக கொண்டாடிய குட்டி கெஜ்ரிவால்..!!

Author: Rajesh
10 March 2022, 1:40 pm

சண்டிகர்: ஆம் ஆத்மியின் முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் போல வேடமணிந்த அக்கட்சி தொண்டரின் சிறிய குழந்தை ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோன்மணி அகாலிதளம் இடையே கடும் போட்டி நிலவியது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் பலவும் ஆம் ஆத்மிக்கு சாதமாக வந்தன.

குட்டி கெஜ்ரிவால்
courtesy

117 தொகுதிகளின் முடிவுகளை தேர்தல் ஆணையம் தனது இணைய தளத்தில் பதிவேற்றியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி மொத்தம் 90 இடங்களில் முன்னணியில் உள்ளது. 42% வாக்குகளை அள்ளியுள்ளது. இந்த வெற்றியை ஆம் ஆத்மி கட்சித் தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். டெல்லியை அடுத்து பஞ்சாப்பிலும் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது ஆம் ஆத்மி கட்சி.

பகவந்த் மான் அறிவிக்கப்பட்டதும் வெற்றிக்கான காரணமாக கருதப்படுகிறது. துரி தொகுதியில் போட்டியிடும் ஆம் ஆத்மியின் முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் மான் வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சி தொண்டர்கள் தங்கள் கட்சியின் பெரும்பான்மை வெற்றியை ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர்.

அந்த வகையில், அங்கு ஆம் ஆத்மியின் முதலமைச்சர் வேட்பாளர் பகவந்த் மான் மற்றும் ஆம் ஆத்மி கட்சி தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் போல வேடமணிந்த அக்கட்சி தொண்டரின் சிறிய குழந்தை ஒன்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

  • thalapathy vijay vs thalapathy movie on same day தளபதியுடன் மோதும் தளபதி? அடேங்கப்பா, இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!