வீக்காகும் பாஜகவின் பேஸ்மென்ட்… உத்தரப்பிரதேசத்தில் தட்டித் தூக்கிய இந்தியா; 30 இடங்களில் முன்னிலை..!
Author: Vignesh4 June 2024, 10:04 am
மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்ற முடிந்து. இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. மக்கள் அளித்துள்ள தீர்ப்பை இன்று காலை 8 மணி முதல் வாசிக்க தொடங்குகிறது தேர்தல் ஆணையம். 543 மக்களவைத் தொகுதிகளில் எந்த கட்சி எத்தனை தொகுதிகளை கைப்பற்ற போகிறது யாருக்கு பெரும்பான்மை கிடைக்கப் போகிறது என்று எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்து வருகிறது.
இந்நிலையில், தேர்தலுக்கு முந்தைய பிந்தைய கருத்துக் கணிப்புகளை பொறுத்த வரை பாஜக கூட்டணியை அதிக இடங்களை கைப்பற்றும் என பல நிறுவனங்கள் தெரிவித்தனர்.
2024 லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் 80 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க ஏப்ரல் 19ஆம் தேதி முதல் ஜூன் 1 வரை அனைத்து இடங்களிலும், 7 கட்டங்களாக தேர்தல் நடந்தது. அங்கே பாஜக, அப்னா தளம், லோக் தளம் போன்ற கட்சிகள் கூட்டணி வைத்தன. எதிரே காங்கிரஸ், சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ் ஆகியவை கூட்டணி வைத்தன. பகுஜன் சமாஜ் தனியாக போட்டியிட்டது.
இந்நிலையில் உத்தரபிரதேசத்தில் மட்டும் இந்தியா கூட்டணி 30 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. பாஜகவின் என் டி ஏ கூட்டணி 38 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பாஜகவின் கோட்டையிலே இந்தியா கூட்டணி மிகப்பெரிய அளவில் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.